முக்கிய செய்திகள்

பொறியியல் படிப்பு இலவசம் / நவீனப்படுத்தப்பட இருக்கும் புதிய சென்னை விமானநிலையம் / உலக அழிவும், மாயா இன மக்களும்' / மார்ச் 1 முதல் ஹஜ் பயண விண்ணப்பங்​கள் வினியோகம்: ஹஜ் கமிட்டி அறிவிப்பு / எமிரேட்ஸ் ஐ.டி. அபராதம் பீதி தெளிந்தது.​... / முறைகேடாக வழங்கப்பட்ட 122 2ஜி லைசென்ஸ்களும் ரத்து!!!

Dec 4, 2010

ஒரே பிறையும், பல பல்டியும்


ஒரே பிறையும், பல பல்டியும்

மனதில் உதித்தது மார்க்கமாகுமா?
""பிறை தென்பட்டால் நோன்பு நோற்று கொள்ளுங்கள் பிறை தென்பட்டால் நோன்பை விடுங்கள். பெருநாள் கொண்டாடுங்கள் அவற்றை அடிப்படையாக வைத்தே வணக்க வழி பாடுகளை அமைத்துக் கொள்ளுங்கள்.
உங்களுக்கு மேகமூட்டம் காரணமாக மறைக் கப்பட்டிருந்தால் முப்பதாக பூர்த்தியாக்குங்கள். இரண்டு முஸ்லிம்கள் சாட்சி சொன்னால் அதை அடிப்படையாக வைத்து நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள். நோன்பை விட்டும் விடுங்கள். என இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்''.
(அஹமது : 18137)
தமிழ்நாட்டு மக்களைப் பொருத்தவரை கண் ணால் பார்த்தும், டவுன் காஜி அறிவிப்பை கேட்டும் பிறையை முடிவு செய்தனர். குர்ஆன் ஹதீஸ் மட்டுமே மார்க்கம் என்று மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்ட பின்பு இரண்டு முஸ்லிம் கள் சாட்சி கூறினால் ஏற்றுக் கொள்ளலாம் என்ற ஹதீஸை பின்பற்றி உலகம் முழுவதும் ஒரே பிறை, ஒரே சமுதாயம் என்ற அடிப்படையில் வெளி நாட்டில் இருந்து வரும் தகவலை ஏற்று நோன்பை யும் பெருநாளையும் செயல்படுத்தலாம் என்று முடிவு செய்தனர். அன்று அல்ஜன்னத் மாத இதழில் ஆசிரியராக இருந்த P.ஜைனுலாபுதீனும் குர்ஆன் ஹதீஸ்களை ஆய்வு செய்து வெளிநாட் டில் இருந்து வரும் தகவலை ஏற்றுக் கொள்ளலாம் என்று அந்த பத்திரிக்கையில் பிரச்சாரம் செய்தார். இந்த நிலை த.மு.மு.க. என்ற அமைப்பு உருவாகும் வரைதான். த.மு.மு.க. உருவான பின்பு மக்கள் கூட்டத்தை மனதில் கொண்டு ஊரோடு ஒத்துப்போக முடிவு செய்து வெளிநாட்டு தகவலை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று பல்டி அடித்தார். முன்பு ஆய்வு செய்தது தவறு. மறு ஆய்வு செய்யப்போகிறேன் என்று கிளம்பி அவர் மனதில் உதித்த அரிய கண்டுபிடிப்பை முன் வைத்தார்.
அவரின் கண்டுபிடிப்பு இதுதான்.
""மேகமூட்டம் காரணமாக  ஷவ்வால் பிறை எங்களுக்கு தென்படவில்லை. எனவே நோன்பு நோற்றவர்களாக காலைப் பொழுதை அடைந் தோம். அப்போது ஒரு வாகனக் கூட்டத்தினர் நபி(ஸல்) அவர்களிடம வந்தார்கள். நேற்று பிறை பார்த்தோம் என்று சாட்சி கூறினார்கள். அப் போது நபி(ஸல் அவர்கள் நோன்பை விடுமாறும் விடிந்ததும் பெருநாள் திடலுக்கு செல்லு மாறும் கட்டளையிட்டார்கள்''
(அபு உமைர்(ரழி): அபுதாவூது, இப்னு மாஜா, நஸயி)
மனதில் ஒன்றை முடிவு செய்துவிட்டு மறு ஆய்வு செய்யப்போகிறேன் என்று கிளம்பிய P.J.யின் ஆய்வின் லட்சணத்தைப் பாருங்கள். ரமழான் பிறை பார்த்து நோன்பை நோற்ற வாகனக் கூட்டத்தாருக்கு ­வ்வால் பிறையை பார்த்த பிறகு நோன்பை விடவேண்டுமா? அல்லது ஷவ்வால் மாதத்திலும் நோன்பு நோற்க வேண்டுமா? அல்லது ரமழான் பிறை பார்த்த பிறகு அடுத்த ரமழான் பிறையை பார்க்கும் வரை நோன்பு நோற்க வேண்டுமா? என்ற குழப்பத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் பிறையை பார்த்துவிட்டோம் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் சட்டம் கேட்க வந்தார்களாம்.
நபி(ஸல்) அவர்களும் உங்களுடைய நோன்பை விட்டுவிடுங்கள். உங்களுடைய பெருநாள் திடலுக்கு செல்லுங்கள் என்று கட்டளையிட்டார்களாம். நபி(ஸல்) அவர்களும் அவர் களுடன் இருந்த தோழர்களும் நோன்பை விடவில்லையாம். அதனால் சென்னையில் பிறை பார்த்து சாட்சி சொன்னால் திருச்சியில் இருப்பவர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடாது. திருச்சியில் இருப்பவர்கள் பிறை பார்த்து சாட்சி சொன்னால் மதுரையில் இருப்பவர்கள் ஏற்றுக் கொள்ளக்கூடாது. இதுதான் அவரும், அவருடைய ஜமாஅத்தும் கண்டுபிடித்த அரிய கண்டு பிடிப்பு. இதை கண்டுபிடித்தவர் ஒன்று மன நோயாளியாக இருக்க வேண்டும் அல்லது தன் சுயநலத்துக்காக மனதில் உள்ளதை மார்க்க மாக்கத் துடிக்கும் அயோக்கியராக இருக்க வேண்டும். இதைத் தவிர இது உள்ளத் தூய்மை யுடன் செய்யப்பட்ட ஆய்வல்ல. உள் நோக்கத்துடன் செய்யப்பட்ட ஆய்வாகும்.
கேள்வி இங்கே! பதில் எங்கே!!
இந்த அதிசய கண்டுபிடிப்பில் இருந்து எழும் கேள்விகளுக்கு 10 வருடங்களாக இன்று வரை பதில் இல்லை.
அந்தக் கேள்விகள் இதோ.
1. பிறை பார்த்து நோன்பு நோற்க ஆரம்பித்த வர்கள் அடுத்த பிறை பார்த்து நோன்பை விடவேண்டும் என்ற சட்டம் தெரியாத நிலை யில் நபித்தோழர்கள் இருக்க முடியுமா? பிறை பார்த்து நோன்பு நோற்க சொன்ன நபி (ஸல்) பிறை பார்த்து நோன்பு விட வேண்டும் என்று சொல்லாமல் பாதியை மட்டும் சொல்லி பாதியை மறைத்து விட்டார்களா?
2. இரண்டு தினங்கள் நோன்புடன் கடுமையாக பிரயாணம் செய்து வந்து எஞ்சிய பாதி சட்டத்தை தெரிந்து கொள்ளும் அளவிற்கு நபி (ஸல்) மார்க்கத்தை மறைத்து போதித்தார்களா? இது எப்படி என்றால் தொழுகைக்கு ஆரம்ப தக்பீர் சொல்லிக் கொடுத்துவிட்டு ஸலாம் கொடுத்து முடிப்பதை சொல்லிக் கொடுக்கா மல் விட்டது போல் இருக்கிறது.
3. சட்டம் தெரிய முற்பட்டவர்கள் ஒருவ ரையோ இருவரையோ விரைந்து அனுப்பி இருப்பார்களா? அல்லது கூட்டமாக மெதுவாக வந்து சட்டம் கேட்பார்களா?
4. சட்டம் தெரியாதவர்கள் பிறை பார்த்தாகி விட்டது. அடுத்து என்ன செய்வதென்று கேள்வியாக கேட்பார்கள். ஆனால் ஃப­ஹீது என்று சாட்சி சொன்னதாக இருக்கிறதே?
5. பிறை பார்த்து நோன்பை விடும் சட்டம் தெரியாதவர்கள் தங்கள் ஊருக்குப் போய் எப்படி பெருநாள் தொழுகை தொழுவார்கள்? பிறை பார்த்து அடுத்த நாள் பெருநாள் என்று சட்டம் தெரியாதவர்கள் பெருநாள் தொழு கையின் சட்டம் தெரிந்திருக்க வாய்ப்பு உண்டா?
6. முதல் நாள் மாலை புறப்பட்டு விட்டு, அடுத்த நாள் மாலை மதினா வந்தவர்கள் அங்கிருந்து உடனடியாக புறப்பட்டாலும் அடுத்த மூன் றாம் நாள்தானே பெருநாள் கொண்டாட முடி யும். இது அறிவுக்கு பொருந்துகிறதா?
7. நபிதோழர்கள் நோன்பை விட சொல்லாமல், வாகன கூட்டத்தை நோன்பை விட கட்ட ளையிட்டு இருந்தால் மதினாவில் தங்கி அடுத்த நாள் காலை தொழுதுவிட்டு செல்லுமாறு கட் டளையிட்டு இருப்பார்களா? அல்லது அவர் களது ஊருக்குப் போய் மூன்றாம் நாள் பெரு நாள் தொழுகை தொழ கட்டளையிட்டு இருப் பார்களா? அவர்களுடைய பெருநாள் திடலில் தனிப்பட்ட விஷேசம் ஏதாவது இருக்கிறதா?
தத்தமது பகுதி என்பது ஒரு ஊரா? மாவட்டமா? அல்லது மாநிலமா?
மக்கள் கூட்டத்திற்காக ஒரு பொய்யை சொல்ல ஆரம்பித்து பல பொய்கள் சொல்ல வேண்டிய நிலை க்குP.J.ஆளானார். தமுமுக. கூட்டத்திற் காக பிறை சட்டத்தை அதற்கேற்றார் போல் வளைத்தார்.P.J.யின் மனோ இச்சையில் உரு வான பிறை சட்டமே அவர் த.மு.மு.க.விலிருந்து வெளியேறுவதற்கு ஒரு காரணமாக இருந்தது. 2003 ரமழான் பிறை சென்னையில் பார்க்க வாய்ப்பு இருந்தும் மேகமூட்டம் காரணமாக பார்க்க முடியவில்லை. ஜவாஹிருல்லாஹ் ஊட் டியில் இருந்தும் தமிழ் நாட்டில் பல பகுதிகளில் இருந்தும் தகவல் வருகிறது. P.மூ.விடம் நோன்பை அறிவியுங்கள் என்றார்.
இதை P.J.ஏற்காதது மட்டுமல்ல. பிறை வி­யத்தில் என்னுடைய நிலைபாடு என்ன என்பது கூட ஜவாஹிருல்லாஹ்வுக்கு தெரிய வில்லை என்று கிண்டலடித்தார். அது த.மு.மு.க.விலிருந்து P.J.வெளியேறுவதற்கு ஒரு காரணமாக இருந்தது .P.J.கண்டு பிடித்த அந்த கண்டுபிடிப்புதான் அவருக்கு எதிராக திரும்பி நின்றது. அந்த இமாலய ஆய்வு இதுதான்.
""ரமழான் கடைசி நாள் பற்றி மக்களிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இரு கிராம வாசிகள் வந்து நேற்று பிறை பார்த்தோம் என்று நபி(ஸல்) அவர்களிடம் சாட்சி கூறினார் கள். உடனே நபி(ஸல்) அவர்கள் நோன்பை விடுமாறும் பெருநாள் திடலுக்கு செல்லு மாறும் கட்டளையிட்டார்கள்''  (ஃரிப்யீ பின் கிராஷ், நூல்: அபூதாவூத்)
இந்த ஹதீஸில் அஃராபுகள் என்ற அரபிபதம் வந்திருக்கிறது. அஃராபுகள் என்றால் நகரத்தை சுற்றி அதை சார்ந்து வாழும் கிராமவாசிகள் என்று பொருள். இதன் அடிப்படையில் நகரத்தை சார்ந்து இருக்கும் கிராமவாசிகள் பிறை தகவலை ஏற்றுக் கொள்ளலாம். அடுத்த நகரத்திலிருந்து வரும் பிறை தகவலை ஏற்றுக் கொள்ளக் கூடாது. உதாரணமாக திருச்சி நகரத்தை சார்ந்து சுற்றியுள்ள, வாளவந்தான் கோட்டை, லால்குடி, வயலூர், மணிகண்டம் ஆகிய ஊர்களிலிருந்து வரும் பிறை தகவலை ஏற்றுக் கொள்ளலாம். தஞ்சாவூரிலிருந்தோ, சென்னையிலிருந்தோ, மதுரையிலிருந்தோ, திருநெல்வேலியிலிருந்தோ வரும் தகவலை ஏற்றுக் கொள்ளக் கூடாது. தத்தமது பகுதியில் இருந்து வரும் தகவலை மட்டும் தான் ஏற்கவேண்டும். இல்லை முப்பதாக பூர்த்தி செய்யவேண்டும். இதுதான் இவரது ஆராய்ச்சியில் உதித்த உதிப்பு.
TNTJ உருவான பிறகு தத்தமது பகுதிகளில் என்ற தத்துவம் நடைமுறைப்படுத்த முடியாத வரட்டு வாதமாகி போனது. ஒரு மாவட்டத்தில் மேகமூட்டமாக இருந்தால் TNTJ யினர் முப்பதாக முழுமைப்படத்தாமல், பிற மாவட்டங்களின் தகவலை ஏற்று நோன்பையும், பெருநாளையும் முடிவு செய்தனர். ஆகையினால் தம்பிகளின் நிலை உணர்ந்து அண்ணன் (TNTJ ) அடுத்த பல்டி அடிக்க வேண்டியதாயிற்று.
நீங்கள் நோன்பு என முடிவு செய்யும் நாளில் தான் நோன்பு. நீங்கள் முடிவு செய்யும் நாளில் தான் பெருநாள். நீங்கள் முடிவு செய்யும் நாளில் தான் ஹஜ் பெருநாள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (அபூஹுரைரா (ரழி), நூல்:திர்மிதி)
இந்த ஹதீஸை ஆதாரமாக வைத்து அந்தந்த ஊரில் உள்ள மக்கள் பிறை தகவல் எவ்வளவு தூரத்திலிருந்து கிடைத்தது என்பதை தீர்மானித்து நோன்பையும், பெருநாளையும் முடிவு செய்து கொள்ளலாம் என்று கூறினார். இந்த தூரத்தை தீர்மானிப்பதற்கு என்ன அளவுகோள் என்று கேள்வி வந்ததும் மறுபடியும் பல்டி அடித்து இப்போது புதிதாக ஒன்றை கண்டுபிடித்திருக்கிறார். மக்கள் தீர்மானிக்கும் நாளே நோன்பும், பெருநாளும் என்ற ஹதீஸின் அடிப்படையில் TNTJ நிர்வாக மக்களாகிய நாங்கள் ஒன்று சேர்ந்து தீர்மானித்து இருக்கிறோம். கலாச்சார, மொழி நிர்வாக அடிப்படையில் தமிழ்நாடு முழுவதையும் தத்தமது பகுதியாக முடிவு செய்து, தமிழ் நாட்டில் எங்கிருந்து பிறை தகவல் வந்தாலும் ஏற்றுக் கொள்ளலாம். வெளி மாநிலத்தில் இருந்து வரும் தகவலை ஏற்றுக் கொள்ளக்கூடாது, இது தான் TNTJ மக்கள் தீர்மானிக்கும் நாளே நோன்பு, TNTJ மக்கள் தீர்மானிக்கும் நாளே பெருநாள் என்பதே இப்போதைய கண்டு பிடிப்பு. TNTJ வில் இல்லாதவர்கள் மக்கள் இல்லையா? இனம், மொழி, கலாச்சாரம், வேறுபாட்டை தூக்கி யயறிந்து இந்த சமுதாயம் வேற்றுமையில்லா ஒரே சமுதாயம் என்ற கோட்பாட்டை நடை முறைப்படுத்துவதுதான் ஹஜ் வணக்கம். இந்த நாளை தீர்மானிக்கக்கூடிய TNTJ நிர்வாக மக்கள் முஸ்லிம்களை மொழி மற்றும் கலாச்சார அடிப்படையில் பிறை வி­யத்தை வைத்து பிரி வினையை உண்டு பண்ணலாமா?
அடுத்து யாராவது, தமிழ்நாட்டின் கடைக் கோடியில் உள்ள கன்னியாகுமரியில் உள்ள நாங்கள் எங்களுக்கு அருகிலுள்ள கேரளத்தின் தகவலை ஏற்றுக் கொள்ளக்கூடாது. மிக நீண்ட தொலைவான 650கி.மி. சென்னையின் பிறை தகவலை ஏற்றுக் கொள்ளவேண்டுமா? என்று கேள்வி எழுப்பினால் அடுத்த பல்டியாக கேரளா வையும் தத்தமது பகுதியில் சேர்த்துக் கொள்வார்கள். இப்போது P.J.வின் மகன் முஹம்மது இந்திய தவ்ஹீது ஜமாஅத்தில் சேர்ந்து விட்ட தால் முன்பு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்று மட்டும் இருந்ததால் தமிழ்நாடு தத் தமது பகுதியாக இருந்தது. இப்போது இந்திய தவ்ஹீது ஜமாஅத்தில் இணைந்து விட்டதால், மக்கள் தீர்மானிக்கும் நாளே என்ற ஹதீஸின் அடிப்படையில்,P.J.வின் INTJ மக்கள் தீர்மானித்து இந்தியாவில் எங்கிருந்து தகவல் வந்தாலும் ஏற்றுக் கொள்ளலாம் என்று அந்தர் பல்டி அடிப்பார்கள்.
இன்னும் எதிர்வரும் காலங்களில் P.J.யின் குடும்ப உறுப்பினர்கள் யாராவது அகில உலக தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரை ரிஜிஸ்டர் செய்து வைத்துக் கொண்டு முன்பு இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தாக இருந்தோம் அதனால் இந்தியாவிலிருந்து வரும் தகவலை ஏற்றோம். இப்போது அகில உலக தவ்ஹீது ஜமாஅத்தான தால் மக்கள் தீர்மானிக்கும் நாளே என்ற ஹதீஸின் அடிப்படையில் Pமூயின் குடும்ப மக்கள் தீர்மானித்து உலகில் எங்கிருந்து தகவல் வந்தாலும் ஏற்றுக் கொள்ளலாம் என்று அந்தர் பல்டி அடிப்பார்கள்.
TNTJ வில் உள்ள பெரும்பாலான மக்கள் என்னை தக்லீது செய்கிறார்கள் என்று P.J.யே வாக்குமூலம் கொடுத்து இருக்கிறார். அதனால் எத்தனை அந்தர் பல்டி அடித்தாலும் நம்மை கண்மூடித்தனமாக பின்பற்ற ஒரு பெரும் கூட்டம் இருந்து கொண்டே இருக் கும் என்பதை நன்கு உணர்ந்திருக்கிறார். கண் மூடித்தனமாக பின்பற்றும் மக்கள் தான் இதை உணரவில்லை. அதை உணர்ந்து சுய சிந்தனையுடன் சிந்தித்து தக்லீது மாய வலையிலிருந்து விடுபட எல்லாம் வல்ல அல்லாஹ் வழிகாட்டுவானாக!

No comments:

Visitors