முக்கிய செய்திகள்

பொறியியல் படிப்பு இலவசம் / நவீனப்படுத்தப்பட இருக்கும் புதிய சென்னை விமானநிலையம் / உலக அழிவும், மாயா இன மக்களும்' / மார்ச் 1 முதல் ஹஜ் பயண விண்ணப்பங்​கள் வினியோகம்: ஹஜ் கமிட்டி அறிவிப்பு / எமிரேட்ஸ் ஐ.டி. அபராதம் பீதி தெளிந்தது.​... / முறைகேடாக வழங்கப்பட்ட 122 2ஜி லைசென்ஸ்களும் ரத்து!!!

Dec 10, 2010

சென்னை கிரிக்கெட்: இந்தியா எளிதான வெற்றி; தொடரை 5-0 கணக்கில் வென்றது

சென்னை, டிச.10-
 
இந்தியா- நியூசிலாந்து மோதிய கடைசி ஒரு நாள் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பகல்- இரவு ஆட்டமாக நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் வெட்டோரி பேட்டிங் தேர்வு செய்தார். நியூசிலாந்து அணியின் குப்தில், மெக்குலம் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினார்கள்.
 
முதல் ஓவரிலேயே நியூசிலாந்து அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. முதல் ஓவரின் 4 பந்தில் குப்தில் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறினார்.
 
அடுத்து ஹவ் மெக்கலத்துடன் ஜோடி சேர்ந்தார். மெக்கலம் 14 ரன் எடுத்த நிலையில் நெக்ரா பந்தில் அவுட் ஆனார். இது நெக்ராவின் ஒரு நாள் போட்டியின் 150வது விக்கெட் ஆகும்.
 
அடுத்த வந்த நியூசிலாந்து வீரர்கள் சொற்ப ரன்னில் ஆவுட் ஆனதால் நியூசிலாந்து 27 ஓவரில் 103 ரன்னில் சுருண்டது.இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் அஸ்வின் 3 விக்கெட்டும், பதான், யுவராஜ் சிங், நெக்ரா தாலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்.
 
அடுத்து இந்தியா பேட்டிங் செய்தது. கம்பீர் முதல் ஓவர் 3-வது பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் நாதன் மெக்குலம் பந்தில் அவுட் ஆனார். அடுத்து பட்டேலுடன், கோக்லி ஜோடி சேர்ந்தார். கோக்லி 2 ரன்னில் வெட்டோரி பந்தில் அவுட் ஆனார். அப்போது இந்தியாவின் ஸ்கோர் 3.2 ஓவரில் 10 ரன்னாக இருந்தது.
 
3-வது விக்கெட் ஜோடியாக பட்டேலுடன், யுவராஜ் சிங் ஜோடி சேர்ந்தார். நியூசிலாந்தை போல் இந்தியாவின் விக்கெட்டும் சரியுமோ என்று ரசிகர்கள் நினைத்துக்கொண்டிருக்கையில் இருவரும் சிறப்பாக விளையாடி ரன் சேர்த்தனர். இதனால் கடைசி வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக்கொண்டனர்.
 
இந்தியா 21.1 ஓவரிலேயே 107 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றது. பட்டேல் 56 ரன்னும், யுவராஜ்சிங் 42 ரன்னும் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்தியா 5-0 என்ற கணக்கில் தொடரை வென்றது.

No comments:

Visitors