சென்னை, டிச.7- இதையடுத்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை நேரில் பார்வையிட முதல்- அமைச்சர் கருணாநிதி சிறப்பு அதிகாரிகளை நியமித்தார். இந்த அதிகாரிகள் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு நேரில் சென்று சேத விவரங்களை ஆய்வு செய்தனர்.
இதில் 33 ஆயிரத்து 545 வீடுகள் சேதம் அடைந்திருப்பது தெரியவந்தது. இதில் 4904 வீடுகள் முற்றிலும் இடிந்து விட்டன. 28 ஆயிரத்து 645 வீடுகள் ஓரளவு சேதம் அடைந்துள்ளன. 2,333 கால்நடைகள் பலியாகிவிட்டன. தஞ்சாவூர், நெல்லை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில்தான் அதிக அளவில் கால்நடைகள் பலியாகின. தமிழகத்தில் நேற்று திருவள்ளூர், காஞ்சீபுரம், சென்னை ஆகிய மாவட்டங்களில்தான் அதிக மழை பெய்துள்ளது.
திருவள்ளூரில் 42.6 மி.மீ, சென்னையில் 40.5 மி.மீ., காஞ்சீபுரத்தில் 31.78 மி.மீ. மழையும் பெய்துள்ளது. திருவள்ளூரில் அதிகபட்சமாக பொன்னேரியில் 72 மி.மீ., தாமரைப்பாக்கத்தில் 70 மி.மீ., பூந்தமல்லியில் 69 மி.மீ. மழையும் பெய்துள்ளது.
No comments:
Post a Comment