ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று முன்தினம் காலை 682 விசைப்படகுகள் கடலுக்கு சென்றன. நேற்று காலை 681 விசைப்படகுகள் கரை திரும்பின. ராமேஸ்வரத்தை சேர்ந்த சண்முகநாதன் என்பவரது விசைப்படகில் சென்ற கருப்பசாமி, உடையார், மாணிக்கம் ஆகியோர் நேற்று மாலை வரை கரை திரும்பவில்லை.
இதுகுறித்த புகாரின் பேரில் மாயமான மீனவர்களை மாற்றுப்படகில் சென்று தேட மீன்துறை உதவி இயக்குனர் மோகன் அனுமதி வழங்கினார். சூறைக்காற்று வீசுவதால் மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை. கடந்த 18 நாட்களாக ராமேஸ்வரத்தில் தொடர் மழை நீடிப்பதால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment