முக்கிய செய்திகள்

பொறியியல் படிப்பு இலவசம் / நவீனப்படுத்தப்பட இருக்கும் புதிய சென்னை விமானநிலையம் / உலக அழிவும், மாயா இன மக்களும்' / மார்ச் 1 முதல் ஹஜ் பயண விண்ணப்பங்​கள் வினியோகம்: ஹஜ் கமிட்டி அறிவிப்பு / எமிரேட்ஸ் ஐ.டி. அபராதம் பீதி தெளிந்தது.​... / முறைகேடாக வழங்கப்பட்ட 122 2ஜி லைசென்ஸ்களும் ரத்து!!!

Dec 25, 2010

அரசு நிதியுதவி பெற 10-ம் வகுப்பு தவறியவர்கள் விண்ணப்பிக்கலாம்

சென்னை, டிச. 24: பள்ளி இறுதித் தேர்வு (10-ம் வகுப்பு) தவறியவர்கள் அரசின் நிதியுதவி பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை தெரிவித்துள்ளது.

 இது தொடர்பாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சம்பத் கூறியிருப்பது: பள்ளி இறுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம் ரூ. 100 நிதியுதவி வழங்கப்படவுள்ளது. இந்த நிதியுதவியைப் பெறுவதற்கு, பள்ளிகளில் 9-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 10-ம் வகுப்பு தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெறாதவர்களாக இருந்து, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகியிருக்க வேண்டும். மேலும், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் 45 வயதையும், மற்றவர்கள் 40 வயதையும் கடந்து இருக்க வேண்டும்.

 இந்த நிதியுதவியைப் பெற விரும்புகிறவர்கள், அதற்கான சான்றிதழ்களுடன், சென்னை நந்தனத்தில் உள்ள தொழில் திறனற்றோருக்கான மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் 31-ம் தேதிக்குள் நேரில் வந்து பெயர்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

No comments:

Visitors